விளக்கு ஏற்றும் முறை மற்றும் வழிப்படும் முறை பற்றி பார்ப்போம்.

February 11, 2026

விளக்கு ஏற்றும் முறை மற்றும் வழிப்படும் முறை பற்றி பார்ப்போம்.

பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்களுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும்.

மகாலட்சுமிக்கு பசு நெய் தீபம் ஏற்றலாம்.

பரிகாரங்களுக்காக கோவில்களில் நாம் அதற்கான எண்ணெய்களில் தீபம் ஏற்றலாம்.

தோல் நோய் உள்ளவர்கள் விநாயகருக்கு தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றலாம்.

குலதெய்வத்துக்கு வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய், பைரவருக்கு நல்லெண்ணெய், அம்மனுக்கு விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 5 கூட்டு எண்ணெய் ஏற்றலாம்.

நம்முடைய வீட்டில் அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையிலும் பூஜை அறையில் தீபம் ஏற்றலாம்.

காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும்.

முன்வினைப் பாவம் விலகும்.

மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை.

இவ்வேளையில் தீபம் ஏற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.

நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

அதே போல பசு நெய் தீபமும் ஏற்றி வழிபடலாம்.

பொதுவாக சுத்தமான, கலப்படமில்லாத நல்லெண்ணை ஏற்றி வீட்டில் விளக்கேற்றினாலே போதும்.

சிறிய வெள்ளி காமாட்சி விளக்கு வாங்கி அதில் நெய் ஊற்றி காலையிலும், மாலையிலும் ஏற்றி வைப்பது நல்லது. இதன் மூலம் யாகம் செய்த பலன் கிடைக்கும்.

விளக்கெண்ணெய் ஊற்றி விளக்கேற்றினால் தாம்பத்திய சுகம், புகழ் தேவதை வசியம் கிடைக்கும்.

மகாலட்சுமிக்கு பசு நெய் ஊற்றி விளக்கேற்றலாம்.

மகாவிஷ்ணுவுக்கு நல்லெண்ணை ஊற்றி விளக்கேற்றலாம்.

எல்லா தேவதைகளுக்கும் நல்லெண்ணை விளக்கு ஏற்றலாம்.

பரிகாரத்திற்காக பசுநெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய இந்த ஐந்தும் கலந்த பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் ஏற்றி பஞ்சமி திதியில் வராஹி தேவியை வழிபட்டால் அம்மனின் அருள் கிடைக்கும்.

பஞ்சதீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் ஏற்றி வடக்குப் பக்கம் பார்த்து தீபம் ஏற்றி வந்தால் எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

துன்பங்கள் நீங்கும்.

வரவேண்டிய பண பாக்கிகள் வந்து சேரும்.

தொடர்ந்து 27 பஞ்சமிகள், மாலை வேளையில் சிவன் சன்னதியில் சிகப்பு திரி கொண்டு மண் அகலில் இலுப்பெண்ணெய் தீபம் 9 ஏற்றி மனமுருகி வேண்டி வர, பரிகாரம் முடிவதற்குள் பலன் கை மேல்.

இந்த பரிகாரம் செய்யும் நாட்களில் அசைவம் முட்டை போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

வீட்டின் சுவாமி அறை மட்டுமல்லாது நடு முற்றம், சமையல் அறை, துளசி மாடம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம் மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.

சுத்தமான பருத்திப்பஞ்சு அல்லது தாமரைத்தண்டு திரியினால் மட்டுமே விளக்கேற்ற வேண்டும்.

காமாட்சி அம்மன் விளக்கை கிழக்கு மற்றும் வடக்கு திசையில் மட்டுமே ஏற்ற வேண்டும்.

இதில் கிழக்கு திசையில் விளக்கு ஏற்றுவது மிகவும் நன்மையை அளிக்கக் கூடியது.

எந்தவித காரணத்திற்காகவும் மேற்கு மற்றும் தெற்கு திசையில் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றக்கூடாது.

வீட்டில் இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றக்கூடாது.

ஆலயத்தில் இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி சிவனை வழிபட்டால் கடன்கள் தீரும்.

இலுப்பை எண்ணெய் கோவில்களில் மட்டும்தான் பயன்படுத்தலாம்.

வீட்டில் விளக்கேற்ற இலுப்பை எண்ணெய் பயன்படுத்தக்கூடாது.

ஐந்து வகை எண்ணெய்களைக் கொண்டு கோவில்களில் மட்டுமே விளக்கேற்ற வேண்டும்.

அதே போல கணபதிக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றலாம்.

வீட்டிலோ, கோவிலிலோ விளக்கிற்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் கடலை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றவே கூடாது.

அப்படி ஏற்றி வைத்தால் கடன்கள் பெருகும்.

தீயவிளைவுகள்தான் ஏற்படும்.

கடலை எண்ணெய் பலகாரங்கள் செய்யப்பயன்படும்.

இந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் உடலில் நோய்கள் அதிகரிக்கும்.

தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது.

வாயால் ஊதியும் தீபத்தை குளிர்விக்கக் கூடாது.

பூவால் குளிர்விக்கலாம்.

தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம்.

இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.

தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக குளிர விட்டு விடக் கூடாது.

இது கெடுதலைக் கொடுக்கும்.

தீபத்தை குளிர வைக்க, திரியின் அடிப்பகுதியை “ஓம் சாந்த ஸ்ரூபிணே நம” என்று சொல்லி பின்புறமாக இழுக்க வேண்டும்.

அப்பொழுது தீச்சுடர் சிறிது சிறிதாக குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும் இதுவே வீட்டிற்கு நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *