சித்தர்களின் ஜீவசமாதி,மகா சமாதி தரிசனம்

February 11, 2026

சித்தர்களின் ஜீவசமாதி,மகா சமாதி தரிசனம் என்பதை சில பேர் குறைவாக மதிப்பீடு செய்கின்றனர்.சில பேர் இதை வீண் வழிபாடு என்றும் , சமாதிகளை ஏன் வழிபடவேண்டும் என்று ஏளனம் செய்கின்றனர். இது தவறான செயலாகும்.

இன்று உலகில் உள்ள புகழ் பெற்ற ஆலயங்களில் சித்தர்களின் ஜீவசமாதி, மகா சமாதி உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை.

திருப்பதியில் கொங்கனர் சித்தர் ஜீவ பீடம், பழனியில் போகர் பெருமான் ஜீவபீடம்,திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி ஜீவ பீடம், திருப்பட்டூர் காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் ஸ்ரீ வியாக்கரபாத முனிவர் ஜீவ பீடம், இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

ஜீவசமாதி அர்த்தம் ஜீவன் +சமம்+ஆதி. ஆதியாகிய இறைவனிடம் இருந்து வந்த ஜீவனை சமன் செய்தல் என்று அர்த்தம்.

மகான்கள் தங்கள் உடலை பாதுகாக்க இந்திரியத்தை உடலிலேயே இருக்க செய்து தன்னுடைய அறிவு புலனை, உணர்வுகளை பிரபஞ்சத்தோடு இனைத்து, தன்னுடைய உடலை சுற்றி ஒரு வித காந்த சக்தியாக மாற்றுவதில் வல்லவர்கள்.

அவர்கள் உருவாக்கிய அந்த காந்த சக்தியில் நாம் இணையும் போது நம்முடைய ஜீவகாந்தம்,மகான்களின் ஜீவகாந்ததோடு இனையும் போது நமது சிந்தனை, செயல் உயரம். மொத்தத்தில் நம்முடைய வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். இது மகான்களின் வாக்கு.

சில மகான்களை சில பேர் கல்லால் அடித்து உள்ளனர்.பின்பு அவரின் ஆற்றல் அறிந்து வணங்கி உள்ளனர்.உதாரணமாக சென்னை, திருவொற்றியூர் மகான் ஸ்ரீலஸ்ரீ வீரராகவர், சென்னை, சோழவரம், கல்லுகட்டி சித்தர் இப்படி சொல்லி கொண்டே போகலாம். பித்தனாய் திரியும் யாரையும் எதுவும் செய்யாதீர்கள். முடிந்தால் அவருக்கு உதவி செய்யுங்கள்.

நாம் எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊர் பெரியவர்களிடம் மகான்களின் ஜீவசமாதிகள் எங்கு இருக்கிறதுஎன்று விசாரித்து சென்று வழிபடுங்கள்,ஜீவசமாதிக்கு சென்றவுடன் நம் மனதை தூய்மை படுத்தி ஊது பத்தி ஏற்றி தியான முறையில் வழிபடுங்கள், உங்கள் குறைகள் தீர வழி கிடைக்கும்.

கடவுளை கண்டவர்கள் சித்தர்கள்,மகான்கள், ஞானிகள்,சாதுக்கள், யோகிகள்!

கடவுளை காண முயற்சிப்பவர்கள் பக்தர்கள்!

நாம் கடவுளை கண்டவர்களை வணங்குவோம்,அவர்கள் கடவுளை ( பரம் பொருள்) காண வழி காட்டுவார்கள். நம் குறைகளை போக்கி கொள்ள வழி காட்டுவார்கள்.

ஜீவசமாதி, மகா சமாதி வழிபாடு செய்யுங்கள்!

வாழ்வில் வளம் பெறுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *